சனி, 14 ஏப்ரல், 2012

தமிழில் குரான்

TwitThis

தமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்


இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் பெரும்பாலும் இணையத்தில் தான் படிக்கின்ற மாதிரி இருக்கிறது. அதனால் இணையம் இருப்பின் மட்டுமே பார்த்துக் கொள்ளும் படி இருந்தது. அந்தக்குறையைப் போக்கும் வகையில் குரான் நூலானது தமிழிலும் பயன்படுத்துகிற வகையில் சிறப்பாக மென்பொருள் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் குரானை உங்கள் கணிணியிலேயே வைத்துப் படிக்கலாம். பயன்படுத்தலாம். Zekr என்ற இந்த மென்பொருள் நேர்த்தியான வடிவமைப்புடன் எளிதாகப் பயன்படுத்தும் படியும் இருக்கிறது. 

இந்த மென்பொருளின் மூலம் குரானை எளிதாகப் படிக்கலாம். சூராக்கள் (அத்தியாயங்கள்), ஆயத்துகள் வழியாக குறிப்பிட்ட வசனத்தைத் தேடலாம். சுராக்கள், ஆயத்துகளை முன்னோக்கி பின்னோக்கி செல்லலாம். குறிப்பிட்ட பக்கங்கள் வழியாகவும் தேடலாம். பிடித்த வசனங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம். மேலும் அனைத்து வசனங்களையும் ஆடியோ வடிவில் கேட்க முடியும். குரானை பல மொழிகளில் படிக்கவும் முடியும். மேலும் இந்த மென்பொருளை முற்றிலும் தமிழ் உள்பட சில மொழிகளில் பயன்படுத்த முடியும்.
இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியில் சென்று தரவிறக்கவும்.
http://zekr.org/quran/
இந்த மென்பொருளைப் பயன்படுத்த Java Runtime Environment தேவைப்படும். இல்லாதவர்கள் கீழே சென்று தரவிறக்குங்கள்.
http://www.filehippo.com/download_jre_32/
இந்த மென்பொருளில் இயல்பாக ஆங்கிலம் மற்றும் குறிப்பிட்ட மொழிகளில் குரானைப் படிப்பதாக இருக்கிறது. உங்களுக்கு தமிழ் மற்றும் பல மொழிகள் வேண்டுமானால் கீழே சென்று தரவிறக்க வேண்டும். அதாவது இவையெல்லாம் குரானை Translation செய்து காட்டும்.

தமிழ் மொழிக் கோப்பு - http://tanzil.net/trans/ta.tamil.trans.zip
பிற மொழிகளுக்கு - http://zekr.org/resources.html

பின்னர் இந்த மென்பொருளில் Tools->Add->Translation என்பதில் சென்று தரவிறக்கிய கோப்பைத் தேர்வு செய்தால் நீங்கள் தமிழில் குரானைப் படிக்கலாம். View->Layout இல் சென்று Mixed என்று வைத்துக் கொண்டால் மென்பொருளில் உருது மற்றும் தமிழில் குரானை எளிதாகப் படிக்கலாம்.
Tamil User Interface

இதன் இடைமுகத்தையும் தமிழிலிலேயே காணவும் பயன்படுத்தவும் முடியும். இதற்கு Tools மெனுவில் options செல்லவும். அதில் language என்பதில் தமிழைத் தேர்வு செய்தால் தமிழிலேயே இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருள் இஸ்லாமிய நண்பர்கள் மட்டுமின்றி குரானைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாகப் பயன்படுத்திப் பார்க்க வேண்டிய மென்பொருள்.
நன்றி
பொன்மலர்பக்கம்

1 கருத்துகள்:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் சொன்னது…

பயன் தரும் மென்பொருளை காட்டிதந்தமைக்கு நன்றி...
எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

கருத்துரையிடுக

 

Free Blog Templates

Powered By Blogger

Easy Blog Trick

Powered By Blogger

Blog Tutorial

Powered By Blogger

Twitter Blog Templates © Copyright by தமிழ் இனிய உலகம் | Template by BloggerTemplates | Blog Trick at Blog-HowToTricks