சனி, 19 செப்டம்பர், 2009
புகையிலை மூலம் வரும் நோயால் 100 கோடி பேர் இறப்பார்கள்
புகையிலையைப் பயன்படுத்துவதால் வரும் நோய்களுக்கு இந்த நூற்றாண்டில் சுமார் 100 கோடி பேர் பலியாவார்கள் என உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பீடி, சிகரெட் உள்ளிட்ட பல்வேறு புகையிலைத் தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்துவதைக் குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பலியாவோர் எண்ணிக்கையும குறைய வாய்ப்பில்லை எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.புகையிலைத் தயாரிப்புகளுக்கு விதிக்கப்படும் வரிகள் மூலம் உலக நாடுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 8 லட்சம் கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைத்தாலும், அதில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான பணமே புகையிலைக் கட்டுப்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும் அந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.இது பற்றிப் பேசிய உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலர் டாக்டர் மார்க்கரெட் ஜான், "ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 100 கோடி பேரின் உயிரைக் காப்பதற்கான தீர்வு நமது கையில்தான் உள்ளது' என்றார்.இந்த நோயால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு தடுப்பு மருந்தோ சிகிச்சையோ இல்லை.ஆனால் அரசுகள் மற்றும் சமூக அமைப்புகள் நினைத்தால் இதைச் சாதிக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.இளைய சமூகத்தினர் புகைப்பிடிக்கத் தொடங்குவதைத் தடுப்பது, புகைப்பிடிப்போரை அப்பழக்கத்திலிருந்து விடுபடச் செய்வது போன்ற முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறு உலக நாடுகளுக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
நன்றி technology
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக