சனி, 19 செப்டம்பர், 2009

மருந்தில்லா மருத்துவம்

TwitThis
மருந்தில்லா மருத்துவம் -ஆர்.கே.தெரெஸா


1.தொப்பை குறைய

அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும். இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்.

2.நரம்புகள் பலம் பெற

100 கிராம் வெங்காயத்தை நன்றாக வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும். மதியம் தயிரில் ஒரு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும். 15 நாட்கள் இதைக் கடைப்பிடிக்கவும்.

குண்டாக இருப்பவர்கள் வெங்காயச்சாறு வெறும் வயிற்றில் அருந்த இதயக்கோளாறை முன்கூட்டியே தடுக்கலாம். 100 கிராம் வெங்காயம் பொதும்.

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பச்சை வெங்காயத்தைத் தயிரோடு சேர்த்து உண்டால் எலும்பு மெலிவு நோய் தடுக்கப்படும்.

3.அத்தியாவசியமான ஃபோலிக் அமிலம் பெற

பள்ளி ,கல்லூரி மாணவ மாணவியர், கர்ப்பிணிகள், முப்பது வயதுக்கு மேற்பட்டோர் என அனைவருக்கும் ஃபோலிக் அமிலம் அத்தியாவசியமானது. மூளையை சுறுசுறுப்பாக்குவதில் இதற்கு பெரும்பங்குண்டு. மனநிலை பாதிப்போ, முதுமையில் ஞாபக மறதி நோயோ ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலுள்ளது.

ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகள்

1..பருப்பு வகைகள்

2.பீன்ஸ்

3.வெண்டைக்காய்

4.கறிவேப்பிலை

5.தண்டுக்கீரை

6.முட்டை

7.ஆட்டு ஈரல்

மூளையில் அலுமினியம் சேரக்கூடாது. ஆகையால் அலுமினிய பாத்திரங்களில் சமைக்கக்கூடாது. தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் அலுமினியச் சத்து சேராது. முட்டைக்கோஸ் அதிகம் சேர்க்க வேண்டும்.

ஃபோலிக் அமிலத்தால் குணமடைபவை

1.வாழ்க்கையில் வெறுப்பு

2.காக்காய் வலிப்பு

3.மலட்டுத்தன்மை

4.தாம்பத்திய வாழ்வில் வெறுப்பு

எனவே ஃபோலிக் அமிலம் உள்ள உணவுகளைத் தேர்வு செய்து உண்டு நல்ல பலன் பெறலாமே!

செம்பருத்தியின் மகத்தான மருத்துவம்

செம்பருத்தி பூவை அப்படியே சாப்பிட ரத்தம் சுத்தி அடையும். இதயம் வலிமை பெறும். செம்பருத்தி பூவை நிழலில் காய வைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலைக்குத் தேய்த்தால் சிரசு குளிர்ச்சியடையும். தலைமயிர் கருகருவென வளரும். பூவையும் இலையையும் சேர்த்து அரைத்து ஷாம்புவுக்குப் பதிலாகத் தலையில் தேய்த்துக் குளிப்பது மிக மிகச் சிறந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 

Free Blog Templates

Powered By Blogger

Easy Blog Trick

Powered By Blogger

Blog Tutorial

Powered By Blogger

Twitter Blog Templates © Copyright by தமிழ் இனிய உலகம் | Template by BloggerTemplates | Blog Trick at Blog-HowToTricks