வாயுத்தொல்லையிலிருந்து விடுபட 6 வழிகள்
வயிற்றில் தங்குகின்ற மிகுவாயு( Excess gas )தான் ஏப்பம், வாயு வெளியேறுவது போன்ற தொல்லைகளுக்குக் காரணம்.
தவறாக மூச்சுவிடும் முறையினாலும், அவசர அவசரமாகச் சாப்பிடுவதாலும் மடக், மடக் என்று தண்ணீர் குடிப்பதாலும் ஆக்சிஜன், நைட்ரஜன் அதிகமாக வயிற்றிற்குள் சென்று விடுகின்றன. கார்பன் - டை - ஆக்ஸைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் பெருங்குடலில் உள்ள பாக்டிரியாக்களால் உண்டாகின்றன. இவை ஏப்பமாக வெளியேறுகின்றன.
பட்டாணி, மொச்சை, கொண்டைக்கடலை போன்ற புரதப்பொருட்கள் ஒவ்வாத காற்றைப் பெருங்குடலினுள் ஏற்படுத்துகின்றன. இக்காற்றில் அமோனியா போன்ற வாயுக்கள் அதிகமிருப்பதால் நாற்றம் ஏற்படுகிறது.
ஏப்பம், வாயுத் தொல்லையிலிருந்து விடுபட:
1. இரைப்பைக்கும், குடலுக்கும் தேவையான யோகாசனம் செய்யலாம்.
2. உடற்பயிற்சி, தூித நடை, ஓட்டம், நீச்சல், டென்னிஸ், வீட்டில் இவற்றில் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டால் இரைப்பையும் நன்கு செயல்பட்டு ஹார்மோன்களைச் சுரப்பதால் காற்று தங்காமல் வெளியேறிவிடும்.
3. புரதம் அதிகம் உள்ள பயறு வகைகளைச் சாப்பிட்டாலும் மேற்கண்ட பயிற்சிகளினால் வாயுத்தொல்லை குறையும்.
4. வெள்ளைப்பூண்டு, வெந்தயம், இஞ்சி, புதினா, இளநீர், தேன் இந்த ஆறும் உணவு வகைகளை நன்கு செரிக்கச் செய்து பெருங்குடலுக்குள் தள்ளி விடுகின்றன. இதில் காற்று அதிகமாக உற்பத்தியாவது தவிர்க்கப்படுகிறது.
5. வயிற்றை அமுக்குவதுபோல் உடையணிந்தாலும், வாயுத்தொல்லை ஏற்படும். எனவே தளர்வாக உடை அணியவும்.
6. அடிவயிற்றில் நல்லெண்ணெய் தடவி மசாஜ் செய்வது போல சில நிமிடங்கள் செய்துவிட்டு குளிப்பது நல்லது.
ஏப்பம், வாயுத்தொல்லையை நீக்கும் 14 உணவு வகைகள்
1. சோயாபீன்ஸ், 2. வேர்க்கடலை,3. பாதாம்பருப்பு 4. பட்டாணி 5. பால் 6. பார்லி 7. தேங்காய் 8. தினைமாவு 9.பாசிப்பருப்பு 10.கறிவேப்பிலை 11. முருங்கைகீரை 12. மொச்சை 13. அளவான வெற்றிலை பாக்கு
இந்த 14 வகை உணவுகளைச் சேர்த்து வந்தல் ஏப்பமும், வாயுத்தொல்லையும் காணாமல் போய்விடும்.
போன்ஸ் டிப்ஸ் : தண்ணீரை ஸ்ட்ராவில் குடிப்பது பொல் 'சர்' - எனக்குடித்தால் வயிற்றுனுள் காற்று போகாமல் இருக்கும். பயம், கவலை, மனவருத்தம் போன்றவற்றாலும் ஜீரணம் தடைபட்டு அதிகமான காற்று உற்பத்தியாகும்.
எனவே வீண்பயம், கவலை, வலி, வேதனை யாவற்றையும் மறந்து 'அவன் விட்ட வழி' என்றிருந்தால் உடல் தொல்லைகளைத் தவிர்க்கலாமே.
Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்க "தாருல் ஸஃபா” பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.
சனி, 19 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
அருமை
கருத்துரையிடுக